காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.

தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.

நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.

ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.

பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.

கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.

பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.

இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.

புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.

காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.


நீ கடல் நான் நதி
உன்னைத் தேடி நான் வருவேன்.
நீ கடல் நான் நதி
உனைக் காணும் வரைத் துடித்திருப்பேன்.
நீ கடல் நான் நதி
உனைச் சேரவே என் ஒவ்வொரு பிறப்பும்.
நீ கடல் நான் நதி
உன்னைச் சேரும் வழி நானறிவேன்.
நீ கடல் நான் நதி
என் கடமைகள் முடித்து உனைச் சேர்வேன்.
நீ கடல் நான் நதி
உனைச் சேர்ந்து புதிதாய்ப் பிறப்பேன்.
நீ கடல் நான் நதி
யாருக்கு யார் பிறந்தோம்?
நீ கடல் நான் நதி
நான் உனைச் சேர வழிவிட்டொதுங்கும் ஊரு.
நீ கடல் நான் நதி
எனை யாரும் [...]


நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்… நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி? வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்! நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா! ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா? எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?


வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?

நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!


மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.
மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?


மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!



ஜன்னலுக்கு வெளியே மழையின் ஈரம்
ஒரு மவுனத்தை போல உறைந்து கிடக்கிறது
காலம் வழிந்து கொண்டு இருக்கிறது - இலைகளின் வழியாக
துளிர்த்தும் உதிர்ந்தும்..மழையின் மிச்சங்களாக

சொற்களின் பிம்பங்களை காட்டிய குமிழ்கள் உடைந்து
வெற்றிடங்கள் எங்கும் நிரம்புகின்றன - உறைந்த மவுனத்தில்
இருளும் வெளிச்சமும் கொண்ட அந்தரங்க நடைபாதையின்
சில வளைவுகளில் மிச்சமிருக்கிறது
சில பூக்களும் கொஞ்சம் மழைத்துளிகளும்

எதுவும் இறுதியில்லை எனினும் முத்தமிட தோன்றுகிறது
உன் வெம்மையில் தொலைந்து விட தோன்றுகிறது - எனினும்
மற்றுமொரு முறை கைகளை கோர்த்து மெல்ல பிரிகிறோம்.

மழை மீண்டும் வலுக்கும் என்ற நிலையோடு வானம்
விரிந்து கிடக்கிறது பல நிறங்களில்...
பறவைகள் மட்டுமே பயணிக்கின்றன வானம் முழுவதும்..

"வானின் மழை வீழும் - தரை
வாடும் பயிர் வாழும்
வானின் மழை வாராவிடில்
வாழும் பயிர் வாடும்.

வாடும் பயிர் வாழ்வும் - உயிர்
வாழும் பயிர் தாழ்வும்
தேடிப் பெயல் எனும் கொள்கை(அத்)
தேனார் மழைக்கில்லை.

எனினும்

வானின்று அருள் பொழியும் - தரை
வாடும் பயிர் வாழும்.

கதிரால் திசை ஒளிரும் -- புவி
கண்டே முகம் மலரும்
கதிரே புவி காணாதெனில்
கரையாது இருட்கரையே.

இருள் ஏகிட என்றோ -- ஒளி
இனிதாகிட என்றோ
வருகின்றதோர் கொள்கை
ஒளிவளரும் கதிர்க்கில்லை.

எனினும்

கதிரால் திசை ஒளிரும் -- புவி
கண்டே முகம் மலரும்.

உயிர் என்பனும் துயரோ -- அருள்
உளதென்பதோர் உளவோ
பெயு மாமழை வெயில் தாரகை
பிறிதுள்ளவை எல்லாம்

ஏனென்றதை யார் கண்டவர்
ஏதே பொருள் தெரிவார்
வானுண்டு அதன் கீழே உருள்
வையம் எனல் அல்லால்.

* காதல் கவிதை
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
இரண்டு முத்தங்கள் கொடுத்துஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.இயலாத செயலெனஇரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ளஎன்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.எப்பொழுதும் அளந்தே பேசுபவன்உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவேஅளவின்றி பேசுகிறேன்.
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிடசிறகடித்து தவிக்கும் இமைகள்!
தனியே நீ முணுமுணுக்கும் இனிய பாடல்கள்இசைத்தட்டில் ஒலிக்கையில் இனிமை இழப்பதேன்?

துவக்கி வைத்த குழந்தை ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை. * ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது…
ஆனை சவாரிப் போக!

என் காதல் கவிதைகள்
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்


அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும் பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும் தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ


சொர்க்கம் என்பது எங்கே உள்ளது

சொலவா முடியாது
நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால்
நமைவிட மேல் ஏது

மண்ணில் தெரியுது சொர்க்கம் காண
மானுடரே வாங்க
கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்
கதைகள் ஏன் போங்க

பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்
பாசம் பொழியுங்க
புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க
போரை அழியுங்க

எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை
என்றால் ஏன் சண்டை
வல்லான் இல்லான் என்றில்லாமல்
வசிப்போம் ஊராண்டை

காலையிற் பகைவனைத் தியானம் செய்க
காதலில் ஆழ்ந்திடுக
மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான்
மனம்போல் வாழ்ந்திடுக

உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க
உடனே சிரியுங்க
விர்என வெளியே வாங்க அங்கே
விண்ணைப் பிடியுங்க

சண்டை களுக்குள் நேரம் தொலையுது
சவத்தைத் தள்ளுங்க
அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க
அனுபவம் கொள்ளுங்க

மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை
மறுபடி ஏன் சண்டை
பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு
பழகுக வீட்டாண்டை

புத்தன் ஏசு போதித் தார்கள்
போற்றுக நற்றொண்டை
நித்தம் நித்தம் முழக்குக முழக்கி
நெகிழுக நம் தொண்டை

நாம் எல்லோரும் நபியின் பிள்ளை
நமக்குள் ஏன் சண்டை
பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன
போனது நாள் பண்டை

மானுட சக்தியின் மகத்துவம் கேட்க
மக்காள் வாருங்க
தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும்
தேளிடம் ஏனுங்க

அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம்
அன்பைத் தெளியுங்க
கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில்
காதலைப் பிழியுங்க

குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக்
குற்றம் உமதுங்க
வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த
வகையும் உமதுங்க

கவனம் கண்ணை மூடுங்க உள்ளக்
கதவைத் திறவுங்க
நவநவமான உலகம் உமக்கே
நட்பாய்ப் பரவுங்க

மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை
மனம் போல் சுத்துங்க
கனிவாள் உமையே கவனிப் பாள் எனில்
கவலைகள் வெத்துங்க