கோடை கால குளிர் மங்கை
கொடுத்தாள் முத்தம் இதழ்சிவக்க
முகில் தொட்டே என் மனம் பறக்க


கண் திறந்து மலர் சிரிக்க
கண் மூடி என் மனம் லயிக்க
கனவு எட்டும் வரை
என் மனம் காற்றில் பறக்கிறதே

கதிரவன்
உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்

உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு

நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே
உன் நிழலாக

நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே

நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்

நீ
படபடப்பதை
யாரும் பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்

நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை

என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது

பொறுக்கியை
எப்பிடி தேவதை
காதலிக்கும்..?

-யாழ்_அகத்தியன்

உனக்காய்
எழுதப்பட்ட
கவிதைகள்
ஏராளம்

எனினும்..

என்னை
கவிஞனாக்கிய
உன் கடைசி
கடிதம் மட்டும்

இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!


-யாழ்_அகத்தியன்
என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

-யாழ்_அகத்தியன்

தீவொன்றில் நானும் தனித் தீவென ஏங்க
உன் கனவெனும் ஊரில் அனுமதி தந்தாய்
சிறு குழந்தையாய் ஓடும் பருவங்கள் தாங்க
உன் வருகையினால் மறு உயிர் தந்தாய்


தனிக்கரம் ஒன்றாய் இணைந்திட நினைக்க
பெண் பாவையே பிஞ்சு விரல்களை தந்தாய்
தாய் மொழியினை கூட நொடிகளில் மறக்க
உன் விழிகளால் புது மொழியொன்றை தந்தாய்


என் தோட்டத்து பூக்கள் உன் முகம் பார்க்க
கொடி மலரே உன் வெட்கத்தை தந்தாய்
புயல் காற்றினில் மெல்ல சலனம் கலைக்க
உன் புன்னகை என்னிடம் மட்டுமேன் தந்தாய்


நடை பாதைகள் தோறும் உன் குரல் ஒலிக்க
மெல்லிசையொன்றை உந்தன் நினைவென தந்தாய்
உயிருக்குள் மட்டும் உன் அழகினை ரசிக்க
என் இமைகளாய் உந்தன் கூந்தலை தந்தாய்



தனிமைகள் எனை தொலைவினில் அழைக்க
உறவென நெருங்கி உன்னையே தந்தாய்
மனம் யாரிவள் என்றே பலமுறை கேட்க
உன்னவள் தானே என்று இதயத்தை தந்தாய்


தேடல் தொடரும் ,,,,, ..... ... .. .

இப்படிக்கு,

Babyskanth.R
சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!


my fren
கடல் போன்ற

எனது நெஞ்சத்தில்

நட்பைத் தேடி

தத்தளிக்கும் எ‌ன்

மனக் கப்பலுக்கு

கலங்கரை விளக்கமாய்

எ‌ன் உயிர் தோழி நீ -


தல
உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்…
உன்னோடு வாழ்தல்
வரம்.

உன் நினைவோடு வாழ்தல்
தவம்.

நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.

சந்துரு
உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண் இரண்டும்
ஒளி கொள்ளும்
காதலித்துப்பார்

கொஞ்சம் அமுதம்
நாழிகை நோக்காது
பேசினோம் நம் கதை
நாட்கள் இல்லை
நீ தொலைபேசாத..

ஆனந்தமாய் சுற்றினோம்
அத்தனை வீதிகளிலும்
சோகமுற்ற போது
உன் ஒரு சொல்..

நிஜம் சொல்ல நீ மட்டுமே!
நிழல் கூட வேராகுமே!
தோள் கொடுப்பாய் நீயே!
தோழிக்கு மேலடி தாயே!

இயற்கை
சற்றே பெரிய பக்கம்

பிறக்கும் தேதி,அம்மா, அப்பா,உடன் பிறப்புயென
எதுவும்
நம் தேர்வில்லை
நட்பை தவிர..

இது வரை நான்
கடந்து வந்த
மனிதர்களில்
எனைக் கவர்ந்த
நான் பழகிய
ஒரு சிலரின் பெயர்கள் மட்டும்

தவறு எதும் இருந்தால்

மன்னிக்க என் நண்பர்களே . . .

P.R.I.Y.A.

பிரிவுகள் தற்காலிகமானவை. என்றுதான் ஒரு காலம் வரை எண்ணியிருந்தேன். ஆனால் அவை நிரந்தரமானவைதான் என்று இழந்துவிட்ட சொந்தங்களை,உறவுகளை நட்புகளை எண்ணி வேதனைப்படுகின்றேன்.


எங்களுக்கே எங்களுக்காக நாமே தேடிக்கொள்ளும் ஒரு சொந்தம் ‘நட்பு” மட்டும் தான். அதனால் தானோ என்னவோ உயிர்வரை வேரோடிப்போய் ஒரு அதிர்வை நமக்குள் உண்டு பண்ணுகின்றது. பாலர் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை சேர்ந்திருந்து படித்தவர்களில் நட்பு என்ற வட்டத்துக்குள் வந்து சிக்கிக்கொள்வது மிக மிகச்சிலரே. அந்தக்குழந்தை வயது நட்பு எங்களின் நரை வரை நரைக்காமல் நுரைத்து நிற்கும்.


காலமும் சூழலும் நம்மை எங்கெங்கோ தூக்கிப்போட்டு விட்டிருக்கிறது. இதயம் துடிக்கும் போதெல்லாம் ‘நமக்கான நட்பின் ஏக்கம் நம்மை வாட்டி எடுக்கும் என்பது உண்மைதான். எத்தனையோ ஒளிந்திருக்கும் விடயங்களை ஒளிவு மறைவின்றிச்சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விடுவோமே! இப்போது வெறும் உஷ்ண மூச்சாய் அவை வெளியேறிக்கொண்டிருக்கின்றன.


எனது பாடசாலை நட்பின் அடர்த்தியை உங்கள் வரிகளிலும் கண்டேன். மனசுக்குள் ஏதோ ஒரு தவிப்பு. சிவசோதி!...உங்கள் வாழ்க்கையில் வெளிச்சமாய் இருந்திருக்கிறார்.


நிச்சயம் நீங்கள் மறுபடி சந்திப்பீர்கள். உங்கள் எண்ணம் ஈடேற ஆண்டவனை வேண்டுகின்றேன்.

இப்படிக்கு

(விஜி)

கற்றையாய் நகரும் மேகங்களைக் கடந்து
சிகரங்களின் உச்சியில் ஒற்றையாய் ஏறி
நின்று தேடுகிறேன், உயிர் வரை பரவிய
உன் நினைவின் சுவடுகளை………………….

நிலவின் நிழலில் ஒளிந்து கிடக்கும்
ஒற்றைத் தாமரைக்குள் நீ ஓடி ஒளிந்ததை
அருகில் பறந்த வெள்ளைப் பறவை
மெல்லக் குனிந்து என் காதில் சொன்னது.

உயர்ந்த மரமொன்று கிளை நீட்டி
உதவ நான் கீழறங்கி நடக்கையில்,
ஓவியங்களில் படிந்திருக்கும் வண்ணத்
தீற்றலாய் எண்ணங்களில் நிறைகிறாய் நீ…….

விண்ணைக் கிழித்து வெளிவந்த சின்ன மின்னலின்
விளக்கொளியில் உன் கள்ளச்சிரிப்பை நான் கண்டறிய,

மெல்லப் புரிகிறது……"என் உலகம் நீயென்ற உண்மை".

மனம் இரண்டு, இணைந்தால் திருமணம்
மனம் வறண்டு வாழ்ந்தால் ஒரு மனம்
குணம் கொண்ட வாழ்வது சில மனம்
பணம் கொண்ட வாழ்கையில் பல மனம்,

தினம் வாழ்வதில் போராட்டம்
பணம் குவிப்பதில் தேரோட்டம்
சினம் கொண்ட வாழ்கையில் திண்டாட்டம்
மனம் கூடுகின்ற வாழ்கையில் கொண்டாட்டம்

இருமனம் திரு மணமாகி
திருமணம் ஒரு மனமாகி
விரு வென்று நாட்கள் தாவி
கரு என்ற கர்ப்பம் நிரப்பி

பல பேர் வாழ்வது தேன் அமுதம்
சில பேர் வாழ்வது வீண் பாரதம்
பல பேர் வாழ்வது கண்ணீர் நீரோட்டம்
சில பேர் வாழ்வது பன்னீர் குளிரோட்டம்

வாழ்கையிது நாம் வாழத்தான்
வாழும் வரை நாம் போராடத்தான்
காலமும் ஒரு நாள் கைகூ டும்
காத்திருக்கும் நாளும் ஒரு நாள் திரு நாளாகும்..

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.