என் காதல் கவிதைகள்
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment