தீவொன்றில் நானும் தனித் தீவென ஏங்க
உன் கனவெனும் ஊரில் அனுமதி தந்தாய்
சிறு குழந்தையாய் ஓடும் பருவங்கள் தாங்க
உன் வருகையினால் மறு உயிர் தந்தாய்


தனிக்கரம் ஒன்றாய் இணைந்திட நினைக்க
பெண் பாவையே பிஞ்சு விரல்களை தந்தாய்
தாய் மொழியினை கூட நொடிகளில் மறக்க
உன் விழிகளால் புது மொழியொன்றை தந்தாய்


என் தோட்டத்து பூக்கள் உன் முகம் பார்க்க
கொடி மலரே உன் வெட்கத்தை தந்தாய்
புயல் காற்றினில் மெல்ல சலனம் கலைக்க
உன் புன்னகை என்னிடம் மட்டுமேன் தந்தாய்


நடை பாதைகள் தோறும் உன் குரல் ஒலிக்க
மெல்லிசையொன்றை உந்தன் நினைவென தந்தாய்
உயிருக்குள் மட்டும் உன் அழகினை ரசிக்க
என் இமைகளாய் உந்தன் கூந்தலை தந்தாய்



தனிமைகள் எனை தொலைவினில் அழைக்க
உறவென நெருங்கி உன்னையே தந்தாய்
மனம் யாரிவள் என்றே பலமுறை கேட்க
உன்னவள் தானே என்று இதயத்தை தந்தாய்


தேடல் தொடரும் ,,,,, ..... ... .. .

இப்படிக்கு,

Babyskanth.R

0 comments: