பிரிவுகள் தற்காலிகமானவை. என்றுதான் ஒரு காலம் வரை எண்ணியிருந்தேன். ஆனால் அவை நிரந்தரமானவைதான் என்று இழந்துவிட்ட சொந்தங்களை,உறவுகளை நட்புகளை எண்ணி வேதனைப்படுகின்றேன்.


எங்களுக்கே எங்களுக்காக நாமே தேடிக்கொள்ளும் ஒரு சொந்தம் ‘நட்பு” மட்டும் தான். அதனால் தானோ என்னவோ உயிர்வரை வேரோடிப்போய் ஒரு அதிர்வை நமக்குள் உண்டு பண்ணுகின்றது. பாலர் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை சேர்ந்திருந்து படித்தவர்களில் நட்பு என்ற வட்டத்துக்குள் வந்து சிக்கிக்கொள்வது மிக மிகச்சிலரே. அந்தக்குழந்தை வயது நட்பு எங்களின் நரை வரை நரைக்காமல் நுரைத்து நிற்கும்.


காலமும் சூழலும் நம்மை எங்கெங்கோ தூக்கிப்போட்டு விட்டிருக்கிறது. இதயம் துடிக்கும் போதெல்லாம் ‘நமக்கான நட்பின் ஏக்கம் நம்மை வாட்டி எடுக்கும் என்பது உண்மைதான். எத்தனையோ ஒளிந்திருக்கும் விடயங்களை ஒளிவு மறைவின்றிச்சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விடுவோமே! இப்போது வெறும் உஷ்ண மூச்சாய் அவை வெளியேறிக்கொண்டிருக்கின்றன.


எனது பாடசாலை நட்பின் அடர்த்தியை உங்கள் வரிகளிலும் கண்டேன். மனசுக்குள் ஏதோ ஒரு தவிப்பு. சிவசோதி!...உங்கள் வாழ்க்கையில் வெளிச்சமாய் இருந்திருக்கிறார்.


நிச்சயம் நீங்கள் மறுபடி சந்திப்பீர்கள். உங்கள் எண்ணம் ஈடேற ஆண்டவனை வேண்டுகின்றேன்.

இப்படிக்கு

(விஜி)

0 comments: